;

செவ்வாய், 17 நவம்பர், 2009

குளத்து மீன்


இணைக்கபட்டிருக்கும் படத்தை பாருங்கள் இது அமெரிக்காவில் வெளிடப்பட்ட ஒரு மாதகாலண்டர் அம்மாவாசை பௌர்ணமி காலங்களில் எந்தெந்த நாட்களில் எந்த நேரம் மீன் பிடித்தால் மீன்கள் அகப்படும் என்று டிப்ஸ் கொடுத்துள்ளனர்
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் நமது உடலும் இது போன்ற தோலால் மூடப்பட்ட ஒரு குளம்தான் இதற்குள் இருக்கும் அனைத்து அணுக்கள் மீன் போலத்தான் சூரிய சந்திர னின் ஈர்ப்பு சக்தி க்குபூமியின் ஈர்ப்பு இக்கு உட்பட்டுதான் இருக்கிறது .உதரணமாக அமாவாசை அன்று பிறப்பது தவறில்லை அமாவாசை அன்று குழந்தை ஜனிப்பது தவறு எப்படி :

இந்த படத்தின் மூலமாக நாம் தெரிந்து கொள்வது ஆகாத நாட்களில் எந்த ஒரு முக்கியமான காரியங்கள் செய்வதில்லை ஏனென்றால் இந்த நாட்களில் எல்லாம் நமது மூளை சரிவர வேலை செய்வதில்லை நமது உடம்பில் உள்ள அத்தனை
செல்களும் மூளையும் இந்த சந்திரனின் ஈர்ப்பு விசை சரிவர இல்லாததால் முளுக்க முளுக்க பூமியின் ஈர்ர்ப்பு விசை மட்டும் இருப்பதால் நமது உடம்பில் உள்ள செல்கள் சரி வர வேலை செய்வதில்லை . வெளிஏறும் அணுக்கள் கூட நல்லவைகளாக இருப்பதில்லை ஆகவேதான் நம் முன்னோர்கள் அஷ்டமி நவமி தொட்டது நாசம் என்று சொன்னார்கள் இதனின் இன்னும் விரிவான விளக்கம் இருக்கிறது இப்போது இது போதும் .

சனி, 24 அக்டோபர், 2009

நன்றி

அன்புடயீர் , வணக்கம்
இதுவரை என்னால் இடப்பட்ட இந்த விஷயங்கள் யாருக்கும் பிரயோஜனமாக
இருந்ததாக தெரியவில்லை ஆகையால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன் .யாரேனும் படிக்க நேர்ந்தால் ஏதும் கேள்விகள் இருந்தால் எனது மின்னஞ்சலில் தொடர்பு கொள்க தெரிந்தவரை பதில் சொல்லுகிறேன் .சில விபரங்கள் கேள்வியாக கேட்டவர்களுக்கு பதில் www. hamgana/blogspot.com உள்ளது தேவை என்றால் பார்க்க
இதுவரை தொடர்ந்து வெளிட்ட கூகிள்க்கு .. நன்றி நன்றி நன்றி....

வெள்ளி, 23 அக்டோபர், 2009

முடிச்சு -3

சில பேருக்கு மனநலம் பாதிக்கப்பட்டால் மனநல மருத்துவர் அவர்களுக்கு ஷாக்
ட்ரீட்மென்ட் கொடுப்பதுண்டு .அதே போல் ஹிருதய நோயாளி ஹிருதய நின்றுவிட்டால் உடன் மின்சார ஷாக் கொடுப்பதுண்டு ஏன் - நமது உடல் தசைகள் ஒவ்வொறு செல்லிலும் மின்னூட்டம் இருப்பதால் செயற்கை மின்னூட்டம் செய்து அதன் இயக்கத்தை மீள செய்வதற்காக !!! இதில் மன நலத்திற்காக செய்கும் மின்னூட்டம்
மூளையில் ஏற்படுத்தப்பட்டு ரசாயன மாற்றங்கள் ஏற்படும் இதனால் நோயாளி
சகஜ நிலைக்கு திரும்பும் வாய்ப்புகள் உண்டாகும் .ஆகா எதிலும் மின் காந்த அலைகள் நமது உடம்புக்கு தேவை பல வடிவங்களில் பல வழிகளில் ,அதில் மாங்கல்யமும் ஒரு வழி

வியாழன், 22 அக்டோபர், 2009

முடுச்சு-2

மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் ஒரு + , - . உள்ளது இதில் ஒரு மின்னோட்டம் உண்டு மூளையீல் உள்ள கிரே நிற செல்கள் வெள்ளை நிற செல்களிலும் இந்த மின்னோட்டம்தான் நமது செயல்பாடுகள் அனைத்தும்,, இதில் மின் தூண்டலினால் ஏற்படும் ரசாயன மாற்றம் முதுகு தண்டு நரம்பு-உடலின் பாகங்களுக்கு கொண்டு செல்லும் மின்கடத்தி .இப்போது முதன் முதலாக மாங்கல்யம் கட்டும்போது மூணு முடிச்சு போட்டு அதில் ஒரு மின்னோட்டம் ஏற்படுகிறது இது ,இந்த ஆண்மகன் என்னுடைய வன் , இவனுடன் நான் இணைந்து இருப்பேன் என்று ஒரு பெண் மனதுக்குள் சங்கல்பம் செய்து அவனுடன் வாழ்க்கை நடத்த முற்படுகிறாள் ,இது மூளையில் பதிவாகிறது .அது போல அந்த ஆணுக்கும் இவள் என்னுடுய மனைவி காலம் முளுதும் இவளுடன் இருப்பேன் என் மனதுக்குள் சங்கல்பிக்கிறான் .இதனால் இருவருக்கும் ஒரு அலைவரிசை tune ஆகிறது , இதுவே கடேசி வரை மாங்கல்யம் மூலமாக தொடர்பு ஆகிறது .(மாங்கல்யம் இல்லென ஆளு தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விடுவார்.) நாங்க மாங்கல்யம் இல்லாமலே தொடர்பு உண்டு என்று சொல்லுறவங்க உள்ள காலம் . எங்கேயோ ஒளிபரப்பு ஆகிற t.v., radio.,அலை வரிசைகள் ஒரு குறிப்பிட்ட கருவிகளின் மூலமாக நமக்கு பார்க்க கேட்க முடிகிறது , அது மாதிரிதான் இந்த மண வாழ்கையும் .

செவ்வாய், 20 அக்டோபர், 2009

முடிச்சு-1

மங்கல்யத்தில் போடும் முடுச்சு பலரும் பலவிதமான கருத்து சொல்வார்கள் ..உண்மையான விஷயம் ...
மணமான பெண்ணுக்கு மண வாழ்கைய்ல் thairoid சுரப்பு முக்கியமானது இந்த சுரப்பி நாளமிலாதது இது கழுத்து பகுதியில் உள்ளது .மஞ்சள் கிருமிநாசினி . ஆக மஞ்சள் கயற்ரில் கோர்க்கப்பட்ட மாங்கல்யம் கழுத்தில் கட்டப்படும்போது மின் காந்த அலைகள் மாங்கல்யம் வழியாக கயறு மூலமாக முடுச்சு வரை செல்லும் .இடையே உள்ள thairoid சுரப்பிக்கும் மின் தூண்டல் பின் முதுகெலும்பு மேல் உள்ள நரம்பு வழியாக ஏற்படும் .இதனால் thairoid சுரப்பி தூண்டப்பட்டு சீரான சுரப்பு சுரக்கும் ..நல்ல கரு முட்டை உருவாகும் ..இதெல்லாம் இல்லாமல் கரு முட்டை உருவாகாதா ??? ஆகும் .என்ன பிறக்கும் குழந்தை நார்மலாக இருக்கும் சரியான சைவ உணவு சூரிய சந்திர சஞ்சாரத்தின் கணக்குகள்ஐ போட்டு ஜனிக்கும் குழந்தைகள் அதிக அறிவு ஜீவித்தனம் இருக்கும் ... மந்த்ரம் சொல்லி ஹோமம் வளர்த்து எல்லாம் செஞ்சும் குழந்தை இல்லே, அல்லது நாங்க நல்ல இல்லே , பிறந்த குழந்தை சமார் ,இப்படி 98% பேர் சொல்லுறாங்க அது ஏன் அடுத்து .....

திங்கள், 19 அக்டோபர், 2009

முடிச்சு

மாங்கல்யம் முடிச்சு ஒரு மேட்டர் உள்ளதுங்கோ நாளை....பொது

விஷயம்

உயரமான் கட்டிடங்களில் இடி தாங்கி வைத்திருப்பார்கள் அதன் முனை கூர்மையாக இருக்கும் அதன் தொடர் கீழே பூமியில் புதைதிருபார்கள் .மேலே மேகத்தில் மோதல் ஏற்பட்டு மின் அலைகள் கீழே வரும்போது பச்சையாக இருக்கும் மரம் அல்லது இந்த இடி தாங்கி மின்னலை வாங்கிகொள்ளும் ... .இது போல ....ஒரு கணவனால் காட்டப்படும் மாங்கல்யம் அந்த பெண்மணிக்கு அவர்க்கும் ஒரு பரஸ்பர எண்ண அலைகளை பரிமாறும் ஒரு கருவி போல்வதாகும்.மாங்கல்யம் கோர்த்த கயறு முடிச்சு முதுகெலும்பு மேல் படுகிறது எண்ண அலைகள் மூளைக்கு செல்வது சுலபம் ...இதை கேட்டு, பார்த்து, படித்தால் புரியாது அனுபவித்தால் தெரியும் ... பொது 

மாங்கல்யம் தொடர்ச்சி

முன்னர் மின்சார வயர் கம்பிக்கு மேல சிவப்பு கலர் நூல் துணி இருக்கும் மின்சாரம் கசிவாகமல் இருப்பதற்காக ....அது போல நூலில் மாங்கல்யம் கோர்த்து கட்டும் போது அந்த பெண்ணின் ஆன்ம சக்தி கணவன்குள் அடங்கும்.......
ஒரு தொலைக்காட்சில் மாங்கல்யம் தேவை இல்லை என 60 வயது பெண்மணி மாங்கல்யம் கழட்டி காட்டினார்கள் இன்னொரு பெண் நான் ஆடி மாதம் சனிக்கிழமை ராகு காலத்தில் திருமணம் செய்தேன் எனக்கு குழந்தைகள் உள்ளன என்று ரெம்பா பெருமை பேசினார்கள் .. ஆடி மாதம் திருமணம் செய்தால் மார்ச் ஏப்ரலில் குழந்தை பிறக்கும் அதுவரை கத க தப்பான சூழலில் இருந்த குழந்தை மிகுந்த வெப்பம் காரணமாக வெளியே வந்தவுடன் அக்னி நட்சத்திர வெயில் காலத்தை அனுபவிக்க வேண்டுமா ?? ஆகவேதான் ஆடிமாதம் தம்பதிகளை தள்ளி வை என்று சொன்னார்கள் சரி மாங்கல்யம் கழட்டி ..ஆடி மாதம் மணம் முடித்த ........ இவர்களிடம் ஒரு கேள்வி இந்த செயலினால் நீங்கள் சாதித்த சாதனை என்ன? என்ன லாபம் கிடைத்தது மாங்கல்யம் கட்டியதால் நாங்கள் என்ன நஷ்டபட்டோம் .....எனது தாய் தந்தைக்கு 1939 இல் திருமணம் தந்தைக்கு வயது 19 தாய்க்கு வயது 17 .சுமார் 40 வருடங்கள் வாழ்ந்தார்கள் தந்தை தனது 59 வயதில் காலமானார்கள் நான் எட்டாவது மகன் .எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல் தாய் தந்தை இருவரும் சண்டை போட்டதில்லை .. என் தந்தை நினைப்பதை தாய் செய்வார்கள் தாய் நினைப்பதை தந்தை செய்வார்கள்அவர்கள் திருமணத்தின் போது அம்மா கட்டிய பட்டு சேலை ஒரு பகுதி இன்றும் நான் பாதுகாப்பாக வைத்துள்ளேன் .1950 வருடம் எனது தந்தை ஆந்திர மாநிலம் வியாபார நிமித்தம் சென்றர்களாம் அப்போது டிரைனில் புறப்பட்ட பின்பு கடேசி பெட்டியில் ஏறும்போது படி தட்டி கீழே விளுந்து உயிருக்கு போராடி காலில் கடுமையான அடி பட்டு சுமார் 15 நாட்கள் கழித்து ஊர் வந்தார்களம் சம்பவம் நடந்த அன்று என் தாயாரின் மாங்கல்யம் முடிச்சு அவிழ்ந்து விழுந்ததாக சொன்னார்கள் எனது தந்தை வரும் வரை மிகுந்த கவலையுடன் இருந்தார்களாம் அவர்களுக்குள் இருந்த அன்னிஒன்யம் அப்படி இருந்துள்ளது ..சரி இதில் ஒரு சின்ன விஷயம் உள்ளது ..

சனி, 17 அக்டோபர், 2009

திருமாங்கல்யம்

இது கொஞ்சம் சென்சிடிவான விஷயம் ..
இந்த திருமாங்கல்யம் , மந்த்ரங்கள் சொல்லி, ஹோமம் வளர்த்து, பெரியோர்கள் ஆசீர்வாதம்,செய்து பூட்டும்போது
அதில் மூன்று முடிச்சு போட்டு கட்டுகிறோம் .. இது நமது முன்னோர்கள் பரம்பரை ஆக வழி வந்து நாமும் அது போல செய்கிறோம் . இதனின் உள் அர்த்தம் என்ன என சற்று சிந்திந்தால் சில விஷயங்கள் புலப்படும்.
ஏற்கனவே சொன்னது போல ஹோமம் வளர்க்கும் போது உடலும் மனசும் சுத்தமாகிறது அடுத்து மாங்கல்யம் பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்து கொடுகிறார்கள் இதில் அவர்களின் ஆன்ம சக்தி சேமிக்கப்படுகிறது அவர்கள் முழுக்க முழுக்க இந்த மணமுடிக்கும் தம்பதிகள் பல்லாண்டு நன்றாக வாழட்டும் என வாழ்த்துகிறார்கள் .அந்த வாழ்த்து மின் அலைகளாக அந்த திருமாங்கல்யத்தில் படிகிறது அந்த மங்கல்யத்தை மணமகன் மணமகளுக்கு கட்டுகிறான் .அது முதல் அவன் அந்த பெண்ணை தொடும் ஸ்பரிசம் .பொட்டு வைப்பது .மெட்டி மாட்டுவது ,இன்னும் பல சடங்குகள்ளில் அன்று முதல் முதலாக தொடுவது ...(இன்று அந்தமாதிரி ஒருவிஷயம் இல்லை அதற்கு முன்னரே பல விஷயங்கள் நடை பெறுகிறது ..)இதனால் என்ன அந்த மணபெண்ணுக்கு உடல் ரீதியாக மன ரீதியாக இன்று முதல் இவர் என் கணவர் இவருடைய சுக துக்கங்களில் நானும் பங்கெடுப்பேன் என்ற ஒரு மனபாங்கு வருகிறது.அது போக இன்னொரு விஷயம் உண்டுங்க ??? தொடர்கிறேன் ......

வியாழன், 15 அக்டோபர், 2009

வளையல்

இந்த வளையல் சும்மா அழகுக்காக போடுகிறோம் என நினைக்கிறோம் ஆனால்
அப்படி இல்லீங்க ??.
வளையல் போடுவதால் மலச்சிக்கல் வராது மணிகட்டில் உள்ள நரம்புகள் வளையல் அக்கு பஞ்சர் அளுத்தம் கொடுப்பதால் சிக்கல் ஏற்படுவதில்லை !!!!!!!!
எனது உறவு பெண் அமெரிக்காவில் உள்ளாள் அங்கு அவளுக்கு பிரசவ காலத்தில்
அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றபோது நடந்த நிகழ்ச்சி ...அருகில் வேறு ஒரு பெண்ணுக்கு பிரசவ நேரம் ஆனால் குழந்தை தலை திருமபவில்லை ,டாக்டர்
அந்த பெண்ணின் கணவர் ,குழந்தைகள் அரூகில் உள்ள நண்பர்கள் அனைவரையும் அழைத்து உள்ளிருக்கும் குழந்தைஐ வெளியே வர பாட்டு பாட, பேச ,சின்ன - சின்ன- கருவிகள் வைத்து ஓசை எளுப்ப செய்து அதே நேரத்தில் டாக்டர் ஜெல் தடவி மசாஜ் செய்து குழந்தைஐ எடுத்தாரம் . இங்கேனா... கொடு அனச்தேசிய . எடு கத்திய ,வெட்டு, குழந்தைஐ நல்ல இருக்கு ,பீஸ் ஒரு இருபதியாஞ்சையிரம் கட்டுங்க ???........எதற்கு சொல்கிறேன்...... .பெண்கள் மாசமாக இருக்கும்போது வளைகாப்பு போடுவாங்க அது .. உண்டாக்கும் ஓசை கேட்க கேட்க குழந்தைக்கு அது என்ன ஓசை என அறியும் ஆவலில் வெளியே வரும் இதற்க்காக தான் நம் முன்னோர்கள் வளைகாப்பு என ஒரு சடங்கு வைத்தார்கள் இது போல ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு விஷயம் இருக்கும் நாம்தான் மூட நம்பிக்கை என ஒதிக்கி விடுகிறோம் .. இதனால் நஸ்ட்டம் நமக்குத்தான் .புரிஞ்சா.. சரி !!!!!

புதன், 14 அக்டோபர், 2009

தோடு

என்ன காதில் தோடு போடுவது ஏன் ??
காதின் மடலில் 21 நரம்பு புள்ளிகள் உள்ளன அவை நமது உடம்பில் உள்ள உறுப்புகளுடன் இணைந்துள்ளது அவற்றில் முக்கியமானது கீழ் மடலில்
வட்டமான தோடு போடும் பகுதி நமது ஞாபக சக்தி மூளை உடன் இணைந்துஉள்ளது, அதில் நடுவே துளைத்து தோடு போட்டு அவப்போது
திருகி விட்டால் ஞாபக சக்தி கூடும் . 20 வருடங்களுக்கு முன் பள்ளியில்
ஆசிரியர்கள் வாய்பாடு தவறாக சொல்லும்போது காதை பிடித்து கொண்டு
உக்கி போட சொல்வார்கள் அந்த நேரம் சொல்லும், நினைக்கும் ,விஷயங்கள் மனதில் அப்படியே தங்கும் .இன்னொரு விஷயமும் உண்டுங்க முன் காலத்து பாட்டிகள்,அம்மாக்கள்.. 21... புள்ளிகளிலும் தங்கம் அணிந்தார்கள் ஏன் என் என்னோட மெயிலில் கேளுங்க ???.. அடுத்து வளையல் !!!!

திங்கள், 12 அக்டோபர், 2009

காய்கறி

என்ன காய்கறி சாப்பிடக்கூடாது
சுறைக்கா,பீர்கங்கை ,பூசணிகை . இது ஆண்கள் சப்பிடகூடாத காய் கறி குழந்தை
வேண்டும் என்பவர்கள் அசைவ உணவு அறவே தவிர்க்க வேண்டும் ,
மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள் உண்ணாதீர்கள் , அது மலட்டு தன்மை
உண்டாக்கும் . கூடியவரை பருத்தி துணிகளை அணியுங்கள் இன்னும் சில விஷயங்கள் உள்ளன ..என்னுடுய ஈமெயில் கேளுங்கள் சொல்லுறேன் .....
மெட்டி, கொலுசு, தோடு ,வளையல், திருமாங்கல்யம் ,இதில் எல்லாம் ஒரு விஸ்யம் உள்ளது சொல்லுகிறேன்

வெள்ளி, 9 அக்டோபர், 2009

நெய்

தம்பதிகளே !!!
நீங்கள் உபயோகிக்கும் எண்ணெய் பற்றி எப்போதாவது சிந்தித்தது உண்டா?
டால்டா ,பாமொயில் ,சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் , ( refindoil) இவற்றை எல்லாம்
தவிர்க்க வேண்டும் .நமது முன்னோர்கள் மிக எளிதான் எண்ணைகள் எள்,கடலை ,
நெய் ,இவற்றை உபயோகித்து நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்கள் ஒரு நாளைக்கு ஒரு ஆள் 30ml எண்ணெய் , நெய் .உபயோகிக்க பழமை மருத்துவ நூல்கள்
சொல்கின்றன !! ஆகவே அன்பர்களே கடலை எண்ணெய் பொரிக்க எள் எண்ணெய்
தாளிக்க நெய் சிறுது சாதத்துக்கு நல்ல இருக்கும்......... பொரிக்கிறது குறைவான அளவு வைத்து கொள்ளலாம் .இதனால் கொழுப்பு உடம்பில் சேராது .தினமும் 40minutes நடை பயற்சி....... என்ன காய்கறி உணவு என அடுத்து சொல்கிறேன் .

வியாழன், 8 அக்டோபர், 2009

அக்னி மூலை

நண்பர்களே !!தம்பதிகள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் வீட்டில் தென்கிழக்கு மூலையில் படுக்கை அறை இருக்க கூடாது .இந்த இடம் மிக உஷ்ணமாக இருக்கும்.ஆகையால் கண்டிப்பாக படுக்கை அறை தென் கிழக்கு மூலை தவிருங்கள் ..
இந்த மந்த்ரம் ஏன் சொல்ல வேண்டும் என்ற கேள்விக்கு பதில்--
வந்தேமாதரம் என்ற சொல் கேள்விபட்டிருபீர்கள் இதை ஒரு சில தடவை
சொன்னால் ஒரு உற்சாகம் பிறக்கும் வாகா எல்கையில் மாலை தேசிய கொடி
நிறைவு செய்யும்போது வந்தேமாதரம் என்று நம்மக்கள் சொல்லி ...அடேயப்பா அந்த இடம் பார்க்க வேண்டும் அப்படியே தேச பற்று உணர்ச்சி பொங்குகிறது .இது ஏன்
அந்த சொல் நமது உடம்பில், மூளையில் ஏற்படுத்தும் ரசயான மாற்றம் ,இதூ போல
சில மந்த்ரா சொற்கள் சொல்லும் போது நமது உடல் உறுப்புகள் மூளை தூண்டப்படும் .ஆகவே இந்த மந்த்ரம் அவசியம் ஆகிறது உபயோக படுத்தி பயன் அடைஞ்சா..சரி இல்லே விடுங்க ????

புதன், 7 அக்டோபர், 2009

இதுமாதிரி வீட்டில் அக்னி வளர்த்தால் முக்கியமாக வளர்க்கும் நபர்கள் (தம்பதிகள் ) சைவ உணவு மட்டுமே உண்ண வேண்டும் நமது நாட்டு சீதோஷ்ண நிலைக்கு சைவ உணவுதான் சரி. முக்கியமாக குழந்தை இல்லாத தம்பதிகள் சைவ உணவு பழக்கம் அணுக்கள் உற்பத்திக்கு ஏதுவானது..இது பற்றி பின்னாளில் விளக்கம் தருகிறேன்...
சரி இந்த அக்னி வளர்க்கும் போது எதாவது மந்த்ரம் சொன்னால் தேவலயே !!..காயத்ரி மந்த்ரம், கணபதி மந்த்ரம் சொல்லகூடிய எலேக்ட்ரோனிக் சாதனங்கள்
கிடைகின்றன பயன் படுத்துக ... ஆக..பயன்படித்தி பாருங்கள் இதுவே தீர்வு என்று சொல்ல முடியாது இதுவும் ஒரு முயற்சி ..
பயன்படித்தி பாருங்க பக்க விளைவு ஏதும் இல்லயே ....அப்புறம் உங்கள் இஷ்டம் ..
நான் பொறுப்பு அல்ல !!!!!!!இந்த விஷயங்கள் .ஒரு சேவை அவ்வளவுதான் ...

செவ்வாய், 6 அக்டோபர், 2009

மாங்கு்சசி

அன்பர்களே .
இந்த மாங்குச்சி ,ஆலங்குச்சி ,அரசங்குச்சி,பசுன்சாணி வரட்டி ,நாயுருவி (நோயுருவி)செடி குச்சி ,கொஞ்சம் பசு நெய் ,நவ தான்யம் , கதலி பழம் ,
ஒரு சின்ன பட்டு துணி ,தர்பை புல் ,மாங்குளை ,பச்சரிசி மாவு ,பச்சநெல்லு ,
அவல்,சர்க்கரை துண்டு ,கொஞ்சம் சுத்த அன்னம் ,(உப்புபோடது பச்சரிசி சாதம்)
இது எல்லாம் சேர்த்து கொள்க .காலை 5.45 மணிக்கு பச்ச கற்புரம் போட்டு அக்னி
வளர்த்து அதில் இந்த சமித்து போட்டு அக்னி வளர்த்தால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை உண்டாகும் இது ஒரு முயற்சி வீட்டில் நோயு்றவர்கள்
இருந்தால் சிறுது குணமாகலாம் .

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

பஞ்ச கவ்யம்

இந்த பஞ்ச கவ்யம் நல்லதொரு நோய் எதிர்ப்பு திறனுள்ள திரவம் .தினம் காலை
ஒரு உளுந்து முங்கும் அளவு மூன்று முறை அருந்தினால் மிக நல்லது .இதை தயாரிப்பது மிக எளிது .
ஒரு பங்கு பால்
அதில் அரை பங்கு தயிர்
அதில் அரை பங்கு நெய்
அதில் அரை பங்கு பசு சலம்
அதில் அரை பங்கு பசு சாணியின் கரைத்த நீர்( வடிக்கட்டி சேர்க்க)
இந்த ஐந்தும் சேர்ந்து நமது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டுபண்ணும் .
மேலும் கருப்பையில் ஏற்படும் சில கிரிமிகள் அளிக்கபட்டு சுத்தப்படுத்தும் .
தற்போது செடிகளுக்கு நல்லதொரு வளர்ச்சி ஊக்கி என இத் திரவம் பயன்படுகிறது .

புதன், 30 செப்டம்பர், 2009

பசுஞ் சாணி

என்ன ஸ்மெல் அடிக்குதா ?? ஆனா பாருங்க அதில் இருக்கும் விஷயம் இன்று உலகை கலக்கும் ....
ஓசோன் காற்று ....... சுற்று புற சுழல் கெட்டு விட்டது காற்று மாசு படுது ராக்கெட் விட்டு ஓசோன் படலம் ஓட்டை..... தொழிற்சாலை புகை ஐயோ போச்சு ???
ஒரு சின்ன விஷயம் செயலாம் காலயில் நமது வீட்டு முன்பு சாணி தண்ணீரில் கரைத்து தெளியுங்கள் உங்க வீட்டு முன்பு ஓசோன் காற்று இழுக்கப்பட்டு சூழல்
நன்றாகும் . எப்படி!!!!!! பசுஞ் சாணிக்கு அவ்வளவு சக்தி .,, அதுதான் முன்பு வீடுகளில் சாணி தெளித்தார்கள் இப்போ பிளாட் ...??? ஒரு சாக்கு விரிங்க அதில் தெளிங்க .சரியா ..
முறைப்படி தயார் செயப்பட்ட பசு சாண வீபுதி நல்ல கிருமி நாசினி .நீரில் குழைத்து முக்கிய இடங்களில் பூசும்போது வியர்வை ஆல் ஏற்படும் கிரிமிகள்
குறையும் .மூட்டுக்களில் பூசும் போது வயதான் காலத்தில் ஏற்படும் மூட்டு வலி குறையும் ..

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

மாங்குளை

மாமரத்தில் இருக்கும் மாங்குளை .... பண்டிகை காலங்களில் வீடுகளில் தோரணமாக கட்டுவோம் அதன் பயன் என்ன ?
மாங்குளை காற்றில் உள்ள மாசுக்களை உரிஞ்சகுடியது இதில் என்ன விசேடம்
மாவிலை காய்ந்தாலும் மாசு காற்றை கட்டுபடுதுமம் ஆகவேதான் தோரணமாக
தொங்கவிடுகிறோம் . சரி மாங்குச்சி நெய் விட்டு அதனுடன் அலங்குச்சி அரசங்குச்சி சேர்த்து .பசும்சாணி வரட்டியுடன் எரிக்கும் போது அந்த இடம் துய்மை
அடைகிறது ......

சனி, 26 செப்டம்பர், 2009

சூரியன்

உலகத்துக்கு ஒளி தருவது சூரியன்
காலையில் வரும் ஒளி அக சிகப்பு கதிர்கள் மலையில் வரும் ஒளி
புற உதா கதிர்கள் இதில் காலை ஒளி நமது தோல் க்கு வேண்டிய வைட்டமின்
மாலை ஒளி உதா நமது அணுக்கள் வளர்ச்சிக்கு ஆகவேதான் படுக்கை அறை
தென்மேற்கு திசைய்ல் இருக்க வேண்டும் ... தற்போது வீடுகளில் உள்புறம் பெயிண்ட் அடிக்கிறோம் வெளிப்புறம் பெயிண்ட் ... இது சூரிய சந்திர கிரகாங்களில்
இருந்து நமக்கு கிடைக்கும் நல்ல கதிர்கள்ல் கிடைக்காமல் போகும் பெயிண்ட் அடிக்கும் போது வெளியல் பிரதிபலித்து விடும் உள்ளே ஊடுருவாது .
சரி ..... வெளி நாடு களில் எப்படி ..........
உலகத்தில் பதின் மூன்று இடங்கள் நன்கு வாழும் இடங்கள் அதில் ஒன்பது நமது பாரத தேசம் .. ஆக நாம் வாழும் இடம் அப்படி ஆகவேதான் தர்மம் பொறுமை இருந்தது ஆனால் இப்போது............ பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகம் குறைப்பது போல் பெயிண்ட் உபயோகம் குறைந்தால் ......... தொடரும் ....
அஷ்டமி நவமி தொட்டது நாசம் ....
அம்மாவாசை பௌர்ணமி காலங்களில் கடல் பொங்குவதை பார்த்திருப்பீர்கள்
சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாக கடல் நீர் பொங்குகிறது ..நமது பூமி இல் இழுப்பு விசை சூரியனின் இழுப்பு விசை சந்திரனின் இழுப்பு அக
மூன்று விசை நமது உடல் அட்படுகிறது நமது உடல் 75%
நீரால் ஆனது ............ அம்மாவாசை பௌர்ணமி காலங்களில் இருந்து எட்டு ஒன்பது நாட்களில் சந்த்ரனின் ஈர்ப்பு விசை அங்கும் இல்லது இங்கும் இல்லது இருக்கும் அந்த நேரம் நமது உடலில் உள்ள நீராக இருக்கும் பாகங்கள் செயல்பாடு முக்கியமாக மூளை
சரிவர இயங்காது ஒரு சிந்தித்து முடிவு எடுப்பது சிரமம் ஆகவேதான் நமது முன்னோர்கள் அஷ்டமி நவமி முக்கியமான் காரியங்கள் வேண்டாம் என சொன்னார்கள் ......இன்னும் இதில் விவரங்கள் உள்ளது அடுத்து பார்க்கலாம்

ஹோமம்

bhopal விஷ வாயு கேள்விபட்டிருபீர்கள்
லக்ஷம் மக்கள் இறந்தார்கள்
ஆனால் ஒரு குடும்பம் பிழைத்தது அவர்கள் வீட்டில்
அக்னி ஹோத்ரம் வளததர்கள் அகவே அவர்கள் குடும்பம் பிழைத்தது
இது மாதிரி சில மர குச்களை பசும் சாணியுடன் எரிக்கும்போது
சுற்றுபுறம் சுத்தமாகிறது அதுபோலே திருமணம் செய்யும் போது
ஹோமம் வளர்த்தல் அந்த புகை பட்டு இரண்டு பேருக்கும் உடல் சுத்தமாகும்
திருமணஙகழில் செயப்படும் சடங்குகள் ஒவ்வொன்றும் ஒரு அர்த்தம் உள்ளது நாம் அதை செய்வதால் நன்மை ஏற்படும்
உதரணமாக : மெட்டி போடுவது மெட்டி விரல் நரம்பு கற்பப்பையுடன் இணைந்துள்ளது ஆகா மெட்டி போடுவதால் கர்ப்பப்பை தூண்டப்பட்டு
நல்ல கரு முட்டை உருவாக்கி நல்ல சந்ததி உருவாகும் . ஹோமம்
வளரததல் அதில் இடப்படும் சமிதுக்கள்ளல்
அதில் உருவாகும் புகை இரண்டு பேருக்கும் நன்மை ஏற்படுத்தும்

இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன ........தொடர்கிறேன்
நல்லவிஷயங்கள் எனது தாய் தந்தை கொடுத்தது மேலும் எனது குருதேவர்
உபதேசம்
மற்றவை அடியேனின் அறியாமை
பார்க்கலாம்