;

சனி, 17 அக்டோபர், 2009

திருமாங்கல்யம்

இது கொஞ்சம் சென்சிடிவான விஷயம் ..
இந்த திருமாங்கல்யம் , மந்த்ரங்கள் சொல்லி, ஹோமம் வளர்த்து, பெரியோர்கள் ஆசீர்வாதம்,செய்து பூட்டும்போது
அதில் மூன்று முடிச்சு போட்டு கட்டுகிறோம் .. இது நமது முன்னோர்கள் பரம்பரை ஆக வழி வந்து நாமும் அது போல செய்கிறோம் . இதனின் உள் அர்த்தம் என்ன என சற்று சிந்திந்தால் சில விஷயங்கள் புலப்படும்.
ஏற்கனவே சொன்னது போல ஹோமம் வளர்க்கும் போது உடலும் மனசும் சுத்தமாகிறது அடுத்து மாங்கல்யம் பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்து கொடுகிறார்கள் இதில் அவர்களின் ஆன்ம சக்தி சேமிக்கப்படுகிறது அவர்கள் முழுக்க முழுக்க இந்த மணமுடிக்கும் தம்பதிகள் பல்லாண்டு நன்றாக வாழட்டும் என வாழ்த்துகிறார்கள் .அந்த வாழ்த்து மின் அலைகளாக அந்த திருமாங்கல்யத்தில் படிகிறது அந்த மங்கல்யத்தை மணமகன் மணமகளுக்கு கட்டுகிறான் .அது முதல் அவன் அந்த பெண்ணை தொடும் ஸ்பரிசம் .பொட்டு வைப்பது .மெட்டி மாட்டுவது ,இன்னும் பல சடங்குகள்ளில் அன்று முதல் முதலாக தொடுவது ...(இன்று அந்தமாதிரி ஒருவிஷயம் இல்லை அதற்கு முன்னரே பல விஷயங்கள் நடை பெறுகிறது ..)இதனால் என்ன அந்த மணபெண்ணுக்கு உடல் ரீதியாக மன ரீதியாக இன்று முதல் இவர் என் கணவர் இவருடைய சுக துக்கங்களில் நானும் பங்கெடுப்பேன் என்ற ஒரு மனபாங்கு வருகிறது.அது போக இன்னொரு விஷயம் உண்டுங்க ??? தொடர்கிறேன் ......

கருத்துகள் இல்லை: