;

திங்கள், 19 அக்டோபர், 2009

மாங்கல்யம் தொடர்ச்சி

முன்னர் மின்சார வயர் கம்பிக்கு மேல சிவப்பு கலர் நூல் துணி இருக்கும் மின்சாரம் கசிவாகமல் இருப்பதற்காக ....அது போல நூலில் மாங்கல்யம் கோர்த்து கட்டும் போது அந்த பெண்ணின் ஆன்ம சக்தி கணவன்குள் அடங்கும்.......
ஒரு தொலைக்காட்சில் மாங்கல்யம் தேவை இல்லை என 60 வயது பெண்மணி மாங்கல்யம் கழட்டி காட்டினார்கள் இன்னொரு பெண் நான் ஆடி மாதம் சனிக்கிழமை ராகு காலத்தில் திருமணம் செய்தேன் எனக்கு குழந்தைகள் உள்ளன என்று ரெம்பா பெருமை பேசினார்கள் .. ஆடி மாதம் திருமணம் செய்தால் மார்ச் ஏப்ரலில் குழந்தை பிறக்கும் அதுவரை கத க தப்பான சூழலில் இருந்த குழந்தை மிகுந்த வெப்பம் காரணமாக வெளியே வந்தவுடன் அக்னி நட்சத்திர வெயில் காலத்தை அனுபவிக்க வேண்டுமா ?? ஆகவேதான் ஆடிமாதம் தம்பதிகளை தள்ளி வை என்று சொன்னார்கள் சரி மாங்கல்யம் கழட்டி ..ஆடி மாதம் மணம் முடித்த ........ இவர்களிடம் ஒரு கேள்வி இந்த செயலினால் நீங்கள் சாதித்த சாதனை என்ன? என்ன லாபம் கிடைத்தது மாங்கல்யம் கட்டியதால் நாங்கள் என்ன நஷ்டபட்டோம் .....எனது தாய் தந்தைக்கு 1939 இல் திருமணம் தந்தைக்கு வயது 19 தாய்க்கு வயது 17 .சுமார் 40 வருடங்கள் வாழ்ந்தார்கள் தந்தை தனது 59 வயதில் காலமானார்கள் நான் எட்டாவது மகன் .எனக்கு நினைவு தெரிஞ்ச நாள் முதல் தாய் தந்தை இருவரும் சண்டை போட்டதில்லை .. என் தந்தை நினைப்பதை தாய் செய்வார்கள் தாய் நினைப்பதை தந்தை செய்வார்கள்அவர்கள் திருமணத்தின் போது அம்மா கட்டிய பட்டு சேலை ஒரு பகுதி இன்றும் நான் பாதுகாப்பாக வைத்துள்ளேன் .1950 வருடம் எனது தந்தை ஆந்திர மாநிலம் வியாபார நிமித்தம் சென்றர்களாம் அப்போது டிரைனில் புறப்பட்ட பின்பு கடேசி பெட்டியில் ஏறும்போது படி தட்டி கீழே விளுந்து உயிருக்கு போராடி காலில் கடுமையான அடி பட்டு சுமார் 15 நாட்கள் கழித்து ஊர் வந்தார்களம் சம்பவம் நடந்த அன்று என் தாயாரின் மாங்கல்யம் முடிச்சு அவிழ்ந்து விழுந்ததாக சொன்னார்கள் எனது தந்தை வரும் வரை மிகுந்த கவலையுடன் இருந்தார்களாம் அவர்களுக்குள் இருந்த அன்னிஒன்யம் அப்படி இருந்துள்ளது ..சரி இதில் ஒரு சின்ன விஷயம் உள்ளது ..

கருத்துகள் இல்லை: